Share |

Thursday 22 April 2010

Sex News: India sex scandal guru arrested

BBC, Apr 21 2010
At the protest against the Swami
Pictures of the holy man were burned at the protest
Police in India say a controversial Hindu holy man facing charges of obscenity has been arrested.
Nithyananda Swami was detained in the northern state of Himachal Pradesh where police said he had been hiding.


The guru stepped down last month as head of a religious organisation based in the southern city of Bangalore.
His announcement came after a video apparently showing him engaging in sexual acts with two women. He says he is innocent and the video is a fake.
Nithyananda Swami has a huge following in southern India and his mission has branches in several countries, including the US and Europe.
'Spiritual seclusion'
"Nithyananda Swami was arrested at Solan [in Himachal Pradesh] along with his associate Gopal Seelam Reddy and they would be brought to Bangalore soon," the city's director general of police, DV Guruprasaad, said.
On Tuesday, the authorities raided the swami's sprawling centre near Bangalore.
Nithyananda Swami, 32, stepped down as leader of the global Dhyanapeetam (Knowledge Centre) organisation soon after the police inquiry was launched.
"I have decided to live a life of spiritual seclusion for some indefinite time," the guru said in a statement.
"If required, I will return and talk about all that had happened as an independent witness to my conduct with a clean heart and pure soul and in a less prejudiced atmosphere."
The video shocked his devotees and angered locals - his ashram near Bangalore was vandalised after TV channels broadcast the video.
The guru's followers allege the video was created and distributed by a jealous inmate of the ashram in a bid to defame him.

******

Vikatan.com

ஹிமாச்சலில் நித்யானந்தா சாமியார் கைது
ஷிம்லா, ஏப்.21,2010
ஹிமாச்சல் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தா சாமியாரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
ஹிமாச்சல் பிரதேச காவல்துறையினரின் உதவியுடன் நான்கு பேர் கொண்ட கர்நாடக காவல்துறை சிறப்புப் படையினர் நித்யானந்தாவை கைது செய்துள்ளனர்.
அம்மாநிலத்தின் ஆர்க்கி என்ற இடத்தில் ஒரு மாத காலமாக நித்யானந்தா பதுங்கியிருந்ததாகவும், இதுதொடர்பான தகவலறிந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் அவர் பிடிபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நித்யானந்தாவை உடனடியாக பெங்களூரு கொண்டு வந்து விசாரிப்பது என கர்நாடக காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
பிடதியில் நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்தா, நடிகையுடன் தனது ஆஸ்ரம அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற விடியோ காட்சிகள் கடந்த மார்ச் 3-ம் தேதி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. இதை அடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார், ஆஸ்ரம நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். அண்மையில்,  ஆஸ்ரமத்தைப் பார்வையிட்ட அவர்கள், சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சில வாரங்களுக்கு முன்பும் நித்யானந்தா ஆஸ்ரமத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

********

Dinamalar.com
ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது
ஏப்ரல் 21,2010,14:35  IST
Top world news stories and headlines detail

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் மலைப்பகுதியில் கைது செய்யப்பட்டார். ரூ. 3 லட்சம் ரொக்கப்பணமும், வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் அமெரிக்க டாலருக்கான  டிராவல்லர் செக்கும் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இதன் மூலம் வெளிநாடு தப்பித்து செல்ல திட்டமிட்டிருந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட  அவர் இமாச்சல பிரதேச கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவசர, அவசரமாக கர்நாடகா கொண்டு வருகின்றனர் போலீசார் .
தமிழக நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்த நித்தியானந்தரின் வீடியோ காட்சி ஒளிபரப்பானதும் இவர்களது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள அவரது ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நான் சட்ட ரீதியாக எவ்வித தவறும் செய்யவில்லை. நடந்தது என்ன என்பது குறித்து நான் விரைவில் மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார் ஆனால் அவர் எங்கும் ,யாருக்கும் காட்சி தரவில்லை. வாரணாசியில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்க சென்றிருக்கிறேன் நான் வருவேன் என்றார்.இது வரை வரவில்லை. தலைமறைவு வாழ்க்கை நடத்தி ஒசாமா பின்லாடன் பாணியில் வீடியோ பேட்டி மட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனாலும் போலீசார் இவரை விட்டபாடில்லை. குறி வைத்துகொண்டே இருந்தனர். இந்நிலையில் நடிகையுடன் உல்லாசமாக இருந்தது மற்றும் ஆசிரமத்தில் நடந்த சட்ட விரோத செயல்கள் குறித்து தமிழக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கர்நாடக போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
ஜாமீ்ன் மறுப்பு : தொடர்ந்து கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரமத்தில் துருவி, துருவி, ஆதாரங்களை சேர்த்தனர். இந்நிலையில் தாம் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இங்கும் அவருக்கு ஆதரவு கதவு திறக்கவில்லை. இந்நிலையில் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என கர்நாடக போலீசார் முகர்ந்து கொண்டிருந்தனர். இன்று இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருந்த நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நித்தியானந்தர் சிம்லா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் கைது செய்யப்பட்ட பக்தானந்தாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.    நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் இவர் பெங்களூரு கொண்டு வரப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ரஞ்சிதா கைது எப்போது ? : நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.
வீடியோ மூலம் நித்தியானந்தா சொன்னது என்ன ? : வீடியோவில் பேசியதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இந்த சோதனையான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனது மீதான குற்றச்சாட்டுகள், வதந்திகள் ஆகிய எல்லாவற்றுக்கும் எனது ஆதாரங்கள் திரட்டி வருகிறேன். திரட்டிய பின்னர் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவர் மீது எந்த எந்த பிரிவுகளில் வழக்கு: நித்தியானந்தர் மீது பிடாதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ். பி., பிசனாகலி கூறியதாவது: சேலம் ஆத்தூரை சேர்ந்த லெனின் என்பவர் மூலம் தமிழக போலீசார் அனுப்பிய தகவல் படி நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஷன் 420 ( மோசடி ) , 376 ( கற்பழித்தல் ) , 377 ( முறையற்ற உடலுறவு ) , 506 ( பி ) (மிரட்டல்) , 120 ( பி) ( குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ) , 295 ( ஏ) , உள்ளிட்ட பிரிவின் கீழ் நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: