by Olaichuvadi
வழக்கறிஞர் உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாதது குறித்து அதிருப்தியடைந்த இண்ட்ராஃப் ஆதரவாளார்கள், நேற்று (சனிக்கிழமை 28/02/2009) காலை 10 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் தனிப்பட்ட முறையில் புகார் அளிக்கச் சென்றபொழுது, காவல்த்துறையினர் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல், வன்முறையைக் கட்டவிழ்க்கும் வகையில் அமில நீரைப் பீய்ச்சியடித்து ஆதரவாளர்களை கலைந்துபோகச் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்த்துறையின் இவ்வராஜகச் செயலை தற்சமயம் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திரு.வேதமூர்த்தி கண்டித்துள்ளார். காவல்த்துறையினரிடம் ஓரவஞ்சனை ஒருபோதும் இருத்தல் கூடாது எனவும், இச்சம்பவம் காவல்த்துறையினரின் நன்மதிப்பை பொதுமக்கள் மத்தியில் மேலும் கெடச் செய்கிறது எனவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ்வன்முறைக்கு பொறுப்பானவர்களை சுஹாகாம் மனித உரிமைக் கழகம் முறையான விசாரணைக்குட்படுத்த வேண்டும் என இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்நிகழ்வின் காணொளிக்காட்சி கீழே..
Part 3
No comments:
Post a Comment